இந்தியாவில் புதிதாக 1,31,968 பேருக்கு கொரோனா... 780 பேர் பலி : கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் அரசுகள்; கண்டுகொள்ளாத மக்கள்!! News By :Dinakaran

Posted Date : 09/04/2021 11:01 am

  • 98
  • டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.67 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதே போல், பாதிப்பு 1.30 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 1,31,968 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,60,542 ஆக உயர்ந்தது. * புதிதாக 780 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,67,642 ஆக உயர்ந்தது. * தொற்றில் இருந்து ஒரே நாளில் 61,899 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,13,292 ஆக உயர்ந்துள்ளது.

    * இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,79,608 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. * இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 91.22% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.28% ஆக அதிகரித்துள்ளது. * சிகிச்சை பெறுவோர் விகிதம் 7.50% ஆக அதிகரித்துள்ளது. * இதுவரை இந்தியாவில் 9,43,34,262 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,91,511 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    Other News