ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரங்கனை! குவியும் பாராட்டுகள்! (TEST)

Posted Date : 15/03/2021 07:14 pm

  • 41
  • XZ
    XZ
    XZ

    தமிழக வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள முதல் வாள்வீச்சு போட்டியாளர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். ஹங்கேரியில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. இந்நிலையில் தரவரிசைப் பட்டியலில் ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக் தனிநபர் சாப்ரே பிரிவில் பவானிதேவி தகுதி பெற்றுள்ளார் வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்கான உலக தரவரிசை பட்டியலில் தற்போது பவானிதேவி 45 வது இடத்தில் உள்ளார். அடுத்த மாதம் 5ஆம் தேதி வெளியாக உள்ள உலக தரவரிசை பட்டியலில் பவானிதேவி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த பவானி தேவி பள்ளி காலத்தில் இருந்தே வாள்வீச்சு விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார். தமக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி 2004ஆம் ஆண்டு முதல் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். 2014ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய வாள் வீச்சு போட்டியில் வெள்ளிப் பதக்கமும் 2015ஆம் ஆண்டு மங்கோலியாவில் வெண்கலப்பதக்கம் இவர் வென்றுள்ளார். இவ்வாறு சர்வதேச அளவில் வெற்றிகளை குவித்த பவானிதேவி பல்வேறு பதக்கங்களை பெற்று அகில உலக அளவில் முத்திரை பதித்து வரும் சாய்னா நேவால், பிவி சிந்து, சானியா மிர்சா, தீபா கர்மாகர் போன்ற இந்திய வீராங்கனைகள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளார்...

    Other News