வேகமாக பரவும் கொரோனா; பரிதாப நிலையில் வேட்பாளர்கள்!

Posted Date : 31/03/2021 01:20 pm

  • 43
  • 'இந்தியா முழுதும் கொரோனா, இரண்டாவது அலை வீசிக் கொண்டிருக்கிறது; எனவே, எல்லோரும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்' என, மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்துகிறது. கடந்த ஆண்டில், நாடு தழுவிய ஊரடங்கான, 'லாக்டவுன்' அமல்படுத்தியதால், தொழில்கள் முடங்கி, மக்கள் வாழ்வாதாரம் இழந்து பெரும் துன்பத்துக்கு ஆளாகினர். அதிலிருந்தே, இன்னும் மீளவில்லை. இந்த நிலையில் தான், கொரோனா இரண்டாவது அலை, இந்தியாவை அடுத்த நெருக்கடியில் தள்ளியிருக்கிறது. இதற்கு மத்தியில், ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்தாக வேண்டும்.

    பிரசாரம், பொதுக் கூட்டங்கள் என, கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் கூட்டம் கூட்டமாக சென்று, மக்களை சந்தித்து வருகின்றனர். மக்களை திரட்டி வந்து, ஒரே இடத்தில் நிற்க வைக்கின்றனர். பொதுமக்களும் கொஞ்சம் கூட பயமில்லாமல், கொரோனா கட்டுப்பாடு விதிகளை அலட்சியம் செய்து நடமாடுகின்றனர். எனினும், சுகாதாரத்துறையின் தொடர் எச்சரிக்கையும், தினந்தோறும் வெளியாகும் கொரோனா பாதிப்பு புள்ளி விபரங்களும் சேர்ந்து, வேட்பாளர்களுக்கும், தலைவர்களுக்கும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

    Other News