விவோவின் இரண்டு மாடல்கள் வெளியீடு: விரைவில் இந்தியா? - சிறப்பம்சங்கள் என்னென்ன? (TESTING)

Posted Date : 04/03/2021 05:24 pm

  • 15
  • விவோ S9 5G மற்றும் விவோ S9e 5G ஆகிய மாடல்கள் சீனாவில் தற்போது வெளியாகியுள்ளன. இந்த இரண்டு மாடல்கள் விரைவில் இந்தியாவிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு மாடல்களும் 5ஜி சப்போர்ட் போன்களாகவே உள்ளன. இந்திய சந்தையில் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை பெற்றுள்ள விவோ இந்த இரு மாடல்களின் மூலம் மேலும் பிரபலமடையும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்திய ரிலீஸ் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. ஆனாலும் இந்த இரு மாடல்களின் சிறப்பம்சங்கள் இந்திய வாடிக்கையாளர்களிடம் பேசுபொருளாகியுள்ளன.

    Vivo S9 5G: ஆண்ட்ராய்ட் 11 ஆக அறிமுகமாகும் இந்த மாடலில் 6.40 இன்ஞ் டிஸ்பிளே உள்ளது. முன்பக்கத்தில் 44மெகாபிக்ஸல்+ 8 மெகாபிக்ஸல் இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புற கேமராவை பொருத்தவரையில் 64+8+2 ஆகிய 3 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 1080x2400 ரெசொலேசன், 4000mAh பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் மாடல் ஆகிய இரண்டு வகைகளில் இந்த போன் வெளியாகியுள்ளது. அதன்படி 8GB RAM போன் இந்திய ரூபாயில் 33,700ஆகவும், 12GB RAM இந்திய ரூபாயில் ரூ.37,100ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Vivo S9e 5G: இந்த மாடல் போனில் முழுத்தகவல்கள் இதுவரை அந்நிறுவனம் வெளியிடவில்லை. MediaTek Dimensity 820 ப்ராசெசர், 32மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 64 மெகாபிக்சல் பின்பக்க கேமரா. 4100mAh பேட்டரி கெபாசிட்டி,33W ஃபார்ஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு OS ஆகிய சிறப்பம்சங்கள் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளன. 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் மாடல் ஆகிய இரண்டு வகைகளில் இந்த போன் வெளியாகலாம் என்றும், அதன்படி 8GB RAM போன் இந்திய ரூபாயில் 26,900 ஆகவும், 12GB RAM இந்திய ரூபாயில் ரூ.30,300ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Other News