திருநள்ளாறு கோவிலுக்கு வருபவர்களுக்கு... கொரோனா சான்றிதழ் தேவையில்லை... உயர்நீதிமன்றம் உத்தரவு! (TEST)

Posted Date : 03/03/2021 06:59 pm

  • 18
  • காரைக்கால் : திருநள்ளாறு சனிபெயர்ச்சியை ஒட்டி, சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பக்தர்களுக்கு வெப்ப நிலை பரிசோதனை செய்து, வெப்ப நிலை அதிகமாக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே கொரோனரா பரிசோதனை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. புதுச்சேரி துணைநிலைஆளுநர் கிரண் பேடி பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என கூறிய நிலையில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    கட்டாயம் வேண்டும் அதன்பேரில் இது தொடர்பான கூட்டம் நேற்று நடந்தது. அதில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள், 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்பிக்க வேண்டும். இல்லையென்றால் கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது என முடிவெடுக்கப்பட்டது.இந்த முடிவை எதிர்த்து காரைக்காலை சேர்ந்த சிங்காரவேலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு அவசர வழக்காக இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    Other News