உள்ளாட்சி தேர்தல், பெண்களுக்கு இலவச கல்வி, பாரதிக்கு சிலை - புதுச்சேரி பாஜக தேர்தல் வாக்குறுதிகள் News By News18

Posted Date : 26/03/2021 06:31 pm

  • 37
  • XZ
    XZ
    XZ
    XZ

    புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். மலரட்டும் தாமரையும் ஒளிரட்டும் புதுச்சேரி என்ற வாசகம் தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்துள்ளது.

    வாக்குறுதிகள்; கொரோனா பேரிடர் காலத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பெறப்பட்ட கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். மகளிர் அனைவருக்கும் இலவச பொது போக்குவரத்து வசதி செய்துத்தரப்படும் அனைத்து பெண் பிள்ளைகளுக்கும் மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 50% பெண்களுக்கான வேலைவாய்பை உறுதி செய்யப்படும் அனைத்து மகளிர்களுக்கும் இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்படும். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வட்டியில்லாத ரூ.5 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். அனைத்து குடும்பங்களிலும் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படும். மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு 150 அடி சிலை நிறுவப்படும் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் விரைவில் நடத்தப்படும் 2.5 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கான வருமானம் இரட்டிப்பாக்கப்படும்அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.2000 உதவித்தொகையாக பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். புதுச்சேரியில் பா.ஜ.க ஆட்சியமைத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு முதலீடுகள் ஈர்க்கப்படும். மாநிலத்திலுள்ள அரசு நிறுவனமான PIPDIC நிறுவனம் மீட்கப்படும். தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் சென்டர் ஆப் எக்ஸ்சலன்ஸ் அமைக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். மாநிலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆடை உற்பத்தி தொழில் நுட்ப பூங்கா உருவாக்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவச பள்ளி கல்வி வழங்கப்படும் இயற்கை பேரழிவுகளின் போது பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்படும் புதிய சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை சுற்றுலாத் தலங்களை அமைப்போம். நவீனமயமான சுற்றுலா மேம்பாட்டு மையம் புதுச்சேரியில் அமைக்கப்படும். புதுச்சேரி மாநிலம் மருத்துவம், ஆன்மிகம், நல்வாழ்வு மற்றும் சாகச விளையாட்டுடன் கூடிய சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றப்படும். முந்தைய அரசால் மூடப்பட்ட அனைத்து நூற்பாலைகளும் பஞ்சாலைகளும் மற்றும் கூட்டுறவு மில்களும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடமாடும் நியாயவிலைக்கடைகள் புதுச்சேரி காரைக்கால் துறைமுகங்கள் நவீனப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்படும். .

    Other News