கப்பல் சிக்கியது எப்படி? துவங்கியது விசாரணை!

Posted Date : 31/03/2021 01:07 pm

  • 22
  • சூயஸ்: ஆப்ரிக்க நாடான எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மீட்கப்பட்டு, மீண்டும் அங்கு, கப்பல் போக்குவரத்து துவங்கியுள்ளது. இந்த கப்பல் சிக்கியதற்கான காரணம் குறித்த விசாரணை துவங்கியுள்ளது. செங்கடலையும், மத்திய தரைக்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய், உலக கடல் வழி வர்த்தகத்தில் மிகவும் முக்கியமான வழித்தடம். ஆய்வுப் பணிஆசியாவையும், ஐரோப்பிய நாடுகளையும் இணைக்கும் இந்தக் கால்வாய் வழியாகச் சென்ற, 'எவர் கிவன்' என்ற சரக்கு கப்பல், சமீபத்தில் கரையின் ஒரு பகுதியில் மோதி, குறுக்கு வசமாக நின்றது. இதனால், அந்த வழித்தடத்தில் சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுபலத்த காற்று வீசியதே, கப்பல் சிக்கியதற்கு காரணம் என கூறப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நடந்த முயற்சிகளுக்குப் பின், அந்த பிரமாண்ட சரக்கு கப்பல், அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்டு, மீண்டும் மிதக்கத் துவங்கிஉள்ளது.தற்போது, கால்வாயில், அகலம் அதிகம் உள்ள பகுதியில், அந்தக் கப்பல் நங்கூரமிட்டுள்ளது.

    கப்பலில் ஏதும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அதன்பிறகே, திட்டமிட்டபடி, ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்கு பயணத்தை தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும். இந்நிலையில், கப்பல் தரைதட்டியதற்கான காரணங்களை ஆராய்வதற்காக, கப்பல் துறை நிபுணர்கள், அந்த சரக்கு கப்பலில் ஆய்வுப் பணியை துவக்கியுள்ளனர் .அடுத்த சில நாட்களுக்கு இந்த ஆய்வுகள் நடக்கும் என்பதால், தற்போதைக்கு, இந்தக் கப்பல், சூயஸ் கால்வாய் பகுதியிலே நிறுத்தப்பட்டிருக்கும் என, தெரிகிறது.பாராட்டுஇந்த சரக்கு கப்பல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, சூயஸ் கால்வாயில், கப்பல் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது. கச்சா எண்ணெய் முதல், பல்வேறு பொருட்களுடன், 367 கப்பல்கள் காத்திருப்பதாக, சூயஸ் கால்வாய் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த, எகிப்து அதிபர் அப்துல் பதாஹ், சரக்கு கப்பல் மீட்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    Other News